நியூயார்க்:"போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு அருகில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, பேறுகாலத்திற்கு முன்பாகவே, குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். கடந்த 1997ம் ஆண்டிலிருந்து, 2008 ம் ஆண்டுவரை 14 ஆயிரம் குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. டோக்கியோவிலிருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ள ஷிசுயோகா பகுதியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சாதாரணமாக, பெண்களுக்கு 40 வாரங்களில் குழந்தை பிறக்கும். ஆனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளின் ஓரத்தில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, பெரும்பாலும் 37 வாரங்களில் குழந்தை பிறந்து விடுகிறது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு அருகில் 200 மீட்டர் இடைவெளியில் வசிக்கும் 15 சதவீத பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்கு, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் வாகன இரைச்சல், வாகன புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் போன்றவையே காரணம். இதுதவிர, வயது மற்றும் வேலைகளின் காரணமாக ஏற்படும் மன அழுத்தமும் குறைபிரசவங்களுக்கு காரணம். எங்களது ஆய்வில் பங்கெடுத்த 50 சதவீத பெண்களுக்கு, சிக்கலான பிரசவ அனுபவமே ஏற்பட்டுள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment