பெங்களூரூ: லஞ்சம் பெறுவதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என பெங்களூரூ அரசு அலுவலர்கள் நிரூபித்து வருகின்றனர். நாட்டில் மத்திய மாநில அளவில் உள்ள அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதில் முன்னிலை வகிக்கிறார்கள் என்றால் பெங்களூரூவில் உள்ள அரசு அலுவலகங்கள் லஞ்சம் பெறுவதில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவில் லஞ்சம் வெகுவளர்ச்சி கண்டு வருகிறது என்பது கவலை தரும் விஷயமாக உள்ளது.
சமீபத்திய ஆய்வின் படி இந்தியாவில் மும்பை, சென்னை, புனே உட்பட 200 பெரிய, நடுத்தர,மற்றும் சிறிய நகரங்களை காட்டிலும் முன்னணியாக உள்ள பெங்களூரூவில் காசு கொடுத்தால் தான் வேலையாகும் என்ற நிலை உள்ளது.
இந்தியாவின் குளுமையான நகரம், முன்னணி ஐ.டி.,நிறுவனங்கள் அமைந்துள்ளது என அனைத்து விதத்திலும் புகழ்பெற்று விளங்கும் இந்த நகரம் லஞ்சம் பெறுவதிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
அரசு அலுவலகங்களில் இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்பதை நிர்ணயித்துவிடலாம் என முன்னர் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வெறுப்பின் உச்சத்தில் ஒரு கருத்தை கூறியது நினைவிருக்கலாம். இதனை பின்பற்றுகிறது பெங்களூரூ நகரம்.
இந்த நகரத்தை சுற்றிலும் சுமார் 33 சப் ரிஜிஸ்டர் ஆபீஸ்கள் உள்ளன. இந்த ஆபீஸ்களில் ரியல் எஸ்டேட் பத்திரப்பதிவு மற்றும் திருமணப்பதிவு போன்ற பல்வேறு பதிவுகள் மூலம் மாதம் தோறும் குறைந்த பட்சம் 3 கோடி ரூபாய் லஞ்சப்பணமாக புரள்வதாக மாநில ஐகோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment