கோதுமை உற்பத்தியை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை
புதுடில்லி : உலக வெப்பமயமாதல் காரணமாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதால் கோதுமை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து கோதுமை உற்பத்தி பாதிப்படையாமல் பாதுகாக்க இந்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. 2007-08ம் ஆண்டில் நாட்டின் கோதுமை உற்பத்தை உச்சத்தை எட்டியது. இந்த ஆண்டில் நாட்டின் மொத்த உணவு உற்பத்தியில் கோதுமையின் பங்கு 71 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 2007-08ம் ஆண்டில் 78.51 மில்லியன் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, 2009-10 ம் ஆண்டில் இது மேலும் அதிகரித்து 80.71 மில்லியன் டன்னானது. இத்தகவலை மாநிலங்களுக்கான வேளாண்மைத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்துள்ளார்.
உலக வெப்பமயமாதலில் இருந்து கோதுமை மற்றும் பிற தானிய பயிர்களை பாதுகாக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தாமஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோதுமை பயிரிடப்படும் 28 மில்லியன் ஹெக்டேரில், 9 மில்லியன் ஹெக்டேர் கோதுமை பயிரிடப்படும் நிலங்கள் வடகிழக்கு பகுதியில் காணப்படுகிறது. 1901ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை இந்தியாவில் காற்றின் வெப்பநிலை ஆண்டுக்கு 0.56 டிகிரி செல்சியஸ் அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment