டிச 17-ம் தேதி மன்மதன் அம்பு!
Manmadhan_Ambu
கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு திரைப்படம் வரும் டிசம்பர் 17-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
தமிழ் சினிமாவுக்கு 2010ன் கடைசி மாதம் இது என்பதால், ஏற்கெனவே தயாராகி சென்சார் செய்யப்பட்டு பெட்டியில் தூங்கும் பல படங்கள் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாக வேண்டும். இப்போதைக்கு 10 படங்களின் வெளியீட்டுத் தேதி உறுதியாகியுள்ளது.
கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு, சசிகுமாரின் ஈஸன் மற்றும் விஜய்யின் காவலன் உள்ளிட்ட படங்கள் இந்த டிசம்பர் மாதமே வெளியாகவிருக்கின்றன.
மன்மதன் அம்பு, ஈசன் ஆகிய படங்கள் டிசம்பர் 17-ம் தேதியும், விஜய்யின் காவலன் டிசம்பர் 24-ம் தேதியும் வெளியாகின்றன.
இது இம்மாத ரிலீஸ் அட்டவணை:
டிசம்பர் 3- சிக்குபுக்கு, தா, ரத்த சரித்திரம்
டிசம்பர் 10- விருதகிரி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, அய்யனார், சித்து ப்ளஸ்டூ
டிசம்பர் 17 - மன்மதன் அம்பு, ஈசன்
டிசம்பர் 24- காவலன்
இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், மெகா பட்ஜெட் படமான மன்மதன் அம்பு, விளம்பரங்கள் கூட வெளியாகாமல் உள்ளது கமல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment