நான்கு நாட்கள் தண்ணீரில் நின்ற சூர்யா!
Actor-surya
நாலு நாள் தண்ணியில இருந்தார் சூர்யா. நல்லாதானே இருந்தாரு. அந்தளவுக்கு பிரச்சினையா? என்பவர்கள் கொஞ்சம் முகம் கழுவிக் கொண்டு படிப்பது நல்லது. இந்த தண்ணி 'அந்த தண்ணி' இல்லை! 'ஏழாம் அறிவு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென்று நடந்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முழுக்க பின்னி மில்லில் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய தண்ணீர் தொட்டியைக் கொண்டு வந்து அதற்குள் இறக்கிவிட்டார்கள் சூர்யாவை.
இருபது அடிக்கு நாற்பது அடி என்ற அளவு கொண்ட பெரிய குடிநீர் தொட்டி அது. முழுவதும் நீர் நிரப்பி (மினரல் வாட்டர்ங்க. அலர்ஜி ஆயிருச்சுன்னா...?) இருந்தார்கள். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பில் வெட்ட வெடவெடக்க அதற்குள் நின்றுக் கொண்டேயிருந்தார் சூர்யா. எதற்காக? கதைப்படி ஏதோ ஆராய்ச்சியாம். அரைமணி நேரம் தண்ணீரில் நின்றாலே தோலெல்லாம் வெளுத்துப் போய்விடும். நான்கு நாட்கள் நின்றும் சூர்யாவுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஏன்? அதற்கு வசதியான க்ரீம்களை தடவிக் கொண்டுதான் உள்ளேயே இறங்கினாராம் அவர்.
இந்த நேரத்தில் படத்தின் நாயகியான ஸ்ருதி கமலும் அங்கிருந்தாராம். ஆனால் அவர் தொட்டிக்குள் இருந்தாரா? அல்லது வெளியே இருந்தாரா? என்பது சீக்ரெட். பொண்ணுகூட இருந்தா நாலு நாள் என்ன.. நாப்பது நாளுகூட நிப்பாரு நம்ம சிக்ஸ்பேக்!
No comments:
Post a Comment