Tuesday, November 30, 2010

டொயோடா எடியோஸ் விலை ரூ. 5.25 லட்சம் ஜனவரியில் முன்பதிவு

டொயோடா எடியோஸ் விலை ரூ. 5.25 லட்சம்

ஜனவரியில் முன்பதிவு


Image
Toyota-Etios

மும்பை.,
ஜப்பான் ஆட்டோ ஜாம்பவான் டொயோடா ஒரு வழியாக எடியோஸை ரூ. 5.25 லட்சத்திற்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.

இந்த கார் இந்திய சாலைகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் என்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு்ள்ளது. இது மாருதி டிசையர், டாடா இன்டிகோ மற்றும் ஹோன்டா சிட்டிக்கு போட்டியாக இருக்கும். இதை பெங்களூர் தொழிற்சாலையில் தயாரிக்க ரூ. 3200 கோடி முதலீடு செய்துள்ளது. மேலும், ஆண்டிற்கு 70000 கார்களைத் தயாரிக்கவிருக்கிறது.

எடியோஸ் 1500 சிசி பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு இறுதியில் டீசல் என்ஜின் எடியோஸ் அறிமுகப்படுத்தப்படும். சிறிய ஹாட்ச்பேக் கார் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

இதன் விலை பற்றி டொயோடா இந்தியாவின் துணைத் தலைவர் எதுவும் உறுதியாகக் கூறவில்லை. அறிமுகத்திற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன் விலை அறிவிக்கப்படும் என்று சூசகமாகத் தெரிவித்தார். வரும் ஜனவரி மாதம் முதல் முன்பதிவு துவங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது டொயோடா இன்னோவா எம்யுவி, கொரோல்லா, கேம்ரி சொகுசு செடான்கள், பார்ச்சுனர் எஸ்யுவி ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த ஆண்டு 73000 கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. எடியோஸின் வரவிற்குப் பிறகு விற்பனையை அடுத்த ஆண்டு 145000 யூனிட்களாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment